சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் நபர்கள், அவர்களுடைய உறுப்பினர் நிதியில் இருந்து கட்டப்படும் பள்ளி, நிழற்குடை, சமுதாயக்கூடம் போன்றவற்றில் அவர்களுடைய புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ள உரிமை உண்டு.
அரசு நிதியில் எதுக்காக உதயநிதி புகைப்படம்..? கேள்வி கேட்கும் பொதுஜனம்.
ஆனால், தி.மு.க.வின் எம்.எல்.ஏ.வும் உதயநிதியின் தோழருமான மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்ட நிழற்குடையில் சட்டமன்றத்திற்கோ அரசிற்கோ தொடர்பில்லாத உதயநிதி ஸ்டாலினின் படத்தை வைத்துள்ளார்.
இதுதான் திருச்சியில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அரசு சொத்து எல்லாமே தி.மு.க.வுக்கு சொந்தம் என்பது போன்று உதயநிதியின் படம் வைக்கப்பட்டதை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்டுள்ளனர்.
என்ன செய்யப்போகிறார் மகேஸ் பொய்யாமொழி..?