PUBG விளையாட அதிரடி தடை! தடாலடியாக முடிவெடுத்தது அரசு!

பெற்றோர்களின் தொடர் புகாரை அடுத்து, PUBG விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.


தனித்து விடப்படும் காட்டில், அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச்சூடுகளை எதிர்கொண்டு வெற்றிபெறும் PUBG விளையாட்டுக்கு வளரும் இளம் சமூகத்தினர் அடிமையாகி வருகின்றனர். எந்நேரமும செல்போனில் பப்ஜி விளையாடிக் கொண்டிருப்பதால் படிப்பு பாலவதாக புகார் எழுந்தது

சமீபத்தில் குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களில் PUBG விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதேபோல் பெற்றோர், பள்ளிகளின் புகார்களை தொடர்ந்து மனோதத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய நேபாள போலீசார், இந்த  விளையாட்டுக்கு தடை விதிக்ககோரி காத்மண்டு மாவட்ட நீதிமன்றத்தில் பரிந்துரை வழங்கினர். 

இதனை ஏற்று PUBG விளையாட்டை நேபாள அரசு தடை செய்தது- மேலு செல்போன்களிலிருந்து பப்ஜி ஆப்பை நீக்க செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்கள் அந்நாட்டில் முன்வந்துள்ளன.