தமிழகத்தில் இந்திக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாக புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஹிந்திக்கு ஆதரவாக பிரச்சாரம்! கிருஷ்ணசாமி அதிரடி!

சென்னையில் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களுக்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர் களுக்கும் ஹிந்தி படிப்பதற்கான வாய்ப்பு தற்போது வரை கொடுக்கப்படவில்லை. இது அந்த மாணவர்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய அநீதி. சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள மாணவர்கள் மட்டுமே சிபிஎஸ்இ பள்ளிகள் மூலமாக இந்தியை கற்கின்றனர்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மூலமாக ஏழை எளிய மாணவர்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகளும் ஹிந்தியை கற்பதற்கான சூழல் ஏற்பட்டது. ஆனால் இதனை திராவிட கட்சிகள் திட்டமிட்டு தடுத்து நிறுத்திவிட்டனர். மாணவர்களுக்கு ஹிந்தி ஏன் அவசியம் என்று தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன்.
தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட தமிழில் ஒரு அறிக்கையை தவறு இல்லாமல் எழுத முடியாது. இந்த அளவிற்குத்தான் தமிழகத்தில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. எனது ஹிந்தி தமிழகத்தில் கற்பிக்கப்படுவதால் தமிழுக்கு எந்த ஆபத்தும் ஏற்படப்போவதில்லை.
இவ்வாறு கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.