குருமூர்த்தி வீட்டுல பெட்ரோல் குண்டு போட வந்தாங்களா..? உடனே குருமூர்த்திக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுங்கப்பா

ஒன்றுமே நடக்கவில்லை என்றாலும், கொலைவெறித் தாக்குதல் நடந்துவிட்டது போன்ற எஃபக்டில் குருமூர்த்தி கொடுத்துவரும் பில்டப் இருக்கிறதே, அடேங்கப்பா ரகம்தான் என்று போலீஸ்காரர்கள் விழுந்துவிழுந்து சிரிக்கிறார்கள்.


அதிகாலை 3 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் ஆறு மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் கையில் பெட்ரோல் குண்டு இருப்பதை அங்கு பாதுகாப்புப் பணியில் போலீஸார் எப்படியோ கண்டுபிடித்து விட்டார்கள். உடனே அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர். 

ஆனால், அந்த ஆறு பேரும் போலீஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடி விட்டார்களாம். இந்த கொடூர சம்பவத்தை மயிலாப்பூர் போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்களாம்.

அந்த 6 பேரும் யார் என்பதைக் கண்டுபிடிக்க அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறதாம். ரஜினியை அரசியலுக்கு கொண்டுவரும் நல்ல காரியத்தை துக்ளக் குருமூர்த்தி செய்துவரும் நேரத்தில், அதனை பிடிக்காதவர்கள்தான் இப்படி செய்திருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

அந்த 6 பேரில் இரண்டு பேர் தி.க.வை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாம். இன்னும் என்னப்பா பிரச்னை? ஒட்டுமொத்தமா அத்தனை தி.க.காரர்களை கைது செஞ்சு உள்ளே போட்டு, முட்டிக்கு முட்டி தட்டுங்க. அப்பத்தான் உண்மை வெளியே வரும்.

இவ்வளவு பிரச்னை நடந்திருக்கு. உடனடியா குருமூர்த்திக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுங்கப்பா...