வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதா..? மோடிக்கு பிரியங்கா எச்சரிக்கை

காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி கட்சிப் பதவியே வேண்டாம் என்று அமைதியாகி விட்டார். சமீபத்தில் இரண்டு மாநிலங்களில் மதிப்புக்குரிய வகையில் வெற்றி கிடைத்திருந்தாலும், உடனே தலைவர் பதவியேற்க ராகுல் முன்வரவில்லை.


அதனால் மோடிக்கு பதில் சொல்லும் வேலையை இப்போது பிரியங்கா காந்தி கையில் எடுத்துள்ளார்.  

பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகளின் வாட்ஸ் ஆப் தகவல்களை மத்திய அரசு அல்லது பா.ஜ.க.வினர் உளவு பார்ப்பதற்கு உத்தரவிட்டிருந்தால், அது மிகப்பெரிய ஊழல், உரிமை மீறல் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

இஸ்ரேலைச் சேர்ந்த உளவு சாப்ட்வேர் பீகாசஸ் மூலம் இந்தியாவைச் சேர்ந்த முக்கிய பத்திரிகையாளர்கள் , மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்த்ததாக தகவல் வெளியானது. இஸ்ரேலைச் சேர்ந்த சைபர் உளவு நிறுவனமான என்எஸ்ஓ 1,400 பேரின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு அவர்களது வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாகவும், தெரிவித்துள்ளது.

இதற்குத்தான் பிரியங்கா காந்தி ட்விட்டரில் இன்று மத்திய அரசுக்கு எதிராக கருத்துப் பதவி செய்திருக்கிறார். இதில் எந்த அளவுக்கு உண்மை என்பதை அரசுதான் தெரிவிக்க வேண்டும்.