பிரதமர் மோடி என்ன ஜாதி? பிரியங்கா காந்தி வெளியிட்ட ஷாக் தகவல்!

பிரதமர் மோடியின் சாதி குறித்து பிரியங்கா காந்தி பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.


2014-ஆம் ஆண்டு தேர்தலின் போது பிரதமர் மோடியின் சாதி விவகாரம் முக்கியமான விவாதப் பொருளாக இருந்தது. அவர் பிற்படுத்தப்பட்டவர் அல்ல என்றும் ஓட்டுக்காக அவர் சாதியை பயன்படுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்நிலையில் தற்போதையை தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசிய மாயாவதி, பிரதமர் மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்த போது அரசியல் ஆதாயத்துக்காக தன்னை பிற்படுத்தப்பட்டவராகக் காட்டிக் கொண்டதாகத் தெரிவித்த்தார். 

அதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி தயவு செய்து தன்னை சாதி அரசியலில் இழுக்காதீர்கள் என்று தெரிவித்தார். மேலும் தனது சாதி குறித்து நாட்டு மக்களுக்கு தெரியாது என்றும் அதை தெரியப்படுத்துவதற்காக கடும் விவாதத்தில் ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சிகளுக்கு நன்றி என்று தெரிவித்த்தார்.

இந்நிலையில் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி பிரதமர் மோடியின் சாதி குறித்து காங்கிரசுக்கோ எதிர்க்கட்சிகளுக்கோ அக்கறையில்லை என்றார். அப்போது மோடி அப்படி என்றால் என்ன ஜாதி? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த பிரியங்கா காந்தி பிரதமர் மோடியின் சாதி என்ன என்று தனக்குத் தெரியாது என்றும் கூறினார். அதே போல் அவர் என்ன ஜாதி என்று யாருக்கும் தெரியாது? எனவும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.