ராகுல் இல்லைன்னா பிரியங்கா! ராகுலின் ராஜினாமா மிகப்பெரிய புரட்சியாக வெடிக்குமாம்! இன்னுமா நம்புது காங்கிரஸ் கட்சி!

ராகுல்காந்தி தன்னுடைய ராஜினாமாவை சமர்ப்பித்து இத்தனை நாட்கள் ஆனபிறகும், ஒரு தலைவனை தேர்வுசெய்ய கட்சிக்கு வழியில்லை.


ராகுல் இல்லைன்னா பிரியங்கா என்ற ரீதியில் காங்கிரஸ் கட்சியினர் யோசித்துக்கொண்டிருக்க, ராகுல் ராஜினாமா மிகப்பெரிய புரட்சியாக வெடிக்கும் என்கிறார் கிறிஸ்டோபர். இவர், ராகுல் காந்தியின் தேர்தல் ஆலோசகர். ஆமாம், எதை வைச்சு அப்படி சொல்கிறாராம்..? என்ன சொல்றாருன்னு கேளுங்க.

ராகுல் அவசரத்திலோ, குழப்பத்திலோ ராஜினாமா முடிவை எடுக்கவில்லை. நிறைய சிந்தித்துத்தான் அந்த முடிவை எடுத்திருக்கிறார் என்பது அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் இருந்து தெரிகிறது. பொறுப்பேற்புடமை கட்சியின் வளர்ச்சிக்கு மிக அவசியம். அதை மூத்த தலைவர்களும் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார். பாஜகவையும், மோடியை தனி மனிதனாக தான் எதிர்த்துப் போராடியதையும், அதற்கு எதிர்பார்த்த ஆதரவு கட்சியின் மூத்த, முக்கிய தலைவர்களிடம் இருந்து கிடைக்கவில்லை என்பதையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

அதோடு சேர்ந்து கட்சியின் புதிய தலைமையை தானே நியமனம் செய்யப்போவதில்லை என்றும், புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் தானும் ஒரு தொண்டனாக இருந்து செயல்படுவேன் என்றும் கூறியிருக்கிறார். கட்சியின் மறுகட்டுமானத்திற்கம், உட்கட்சி ஜனநாயகத்துக்கும் அவர் கொடுத்துள்ள முக்கியத்தும் இதில் இருந்து தெரிகிறது. கட்சிக்குள் ஒரு புரட்சி தேவை என்று சொன்னவர் அதற்கான முதல் விதையை அவரே விதைத்திருக்கிறார். நிச்சயம் இது கட்சிக்குள் ஓர் புரட்சியை ஏற்படுத்தும்.

தமிழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர் காமராஜர் காலத்தில் இருந்தே கட்சியில் இருக்கிறார்கள். கட்சி 40 சதவிகித வாக்கு வங்கியை வைத்திருந்ததற்கும், அது படிப்படியாகத் தேய்ந்து இன்று 4 சதவிகித வாக்கு வங்கி நிலையை அடைந்திருப்பதற்கும் அவர்களே நேரடிச் சாட்சிகள். கட்சியின் வளர்ச்சிக்கும் சரி, சரிவுக்கும் சரி அவர்களுக்கும் அவர்களது குடும்ப அரசியலுக்கும் பங்கிருக்கிறது. எனவே, ராகுல் பாணியில் இதற்கு அவர்களும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். அப்படிப் பொறுப்பேற்றுக் கொண்டால்தான், கட்சியின் போக்கை மாற்ற முடியும் என்று சொல்கிறார்.

என்னப்பா காங்கிரஸ் தலைவர்களே... ராஜினாமா ரெடியா...?