2 பேர் துரத்தி துரத்தி பாலியல் சீண்டல்! பதிலுக்கு பள்ளி ஆசிரியை செய்த தரமான சம்பவம்!

நாகையில் தனியார் பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.


நாகை மாவட்டம் வடகரையைச் சேர்ந்த அந்தப் பெண், கணவனைப் பிரிந்து தனது குழந்தை மற்றும் தாயுடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் அவரை, பள்ளி செல்லும் வழியில் பின் தொடர்ந்து சென்று அரசியல் பிரமுகரான சிராஜுதீன், அமானுல்லா, நூர் முகமது ஆகிய மூவரும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பலமுறை அந்த பெண் எச்சரித்தும் கேட்பதாக இல்லை. கணவன் இல்லாமல் தனியாகத்தானே இருக்கிறாய் வா உல்லாசமாக இருக்கலாம் என்று மூன்று பேரும் தொடர்ந்து அந்த ஆசிரியையை அழைத்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த பெண் தரமான சம்பவத்தை செய்தார்.

ஆம் இதுகுறித்து திட்டச்சேரி காவல்நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளிக்கவே அவரிடம் போலீசார்  வாக்குமூலம் பெற்றனர். இதைத் தொடர்ந்து சிராஜுதீன், அமானுல்லா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள நூர்முஹமதுவை போலீசார் தேடி வருகின்றனர்