பிரைவேட் கம்பெனியில் வேலை போனாலும் 2 வருடத்திற்கு மாத சம்பளம்! மோடி அரசின் புதிய அதிரடி!

தனியார் நிறுவனங்களில் வேலையை இழக்கும் ஊழியர்கள் புதிய வேலை கிடைக்கும் வரை அவர்களுக்கு நிதி உதவி வழங்க ஈ.எஸ்.ஐ. முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் ஈ.எஸ்.ஐ. காப்பீடு திட்டம் பெற்றிருப்பவர்களுக்கு பொருந்தும் என தொழிலாளர் மாநில காப்பீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.


தனியார் நிறுவனங்களில் பொதுவாக குறைந்த பட்சம் ஊதியம் வாங்கும் ஊழியர்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை ஈ.எஸ்.ஐ. காப்பீட்டில் செலுத்துகின்றனர். அந்த பணம் செலுத்துவதன் மூலம் தங்களுக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்களும் இலவசமாக ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். 

இந்நிலையில் தனியார் துறையில் ஏற்படும் சில நஷ்டம் காரணமாக ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படுகிறது. அவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வரை அவர்களுக்கு ஓரளவு நிதி உதவி வழங்கி உதவிடும் வகையில் ஒரு புதிய திட்டத்தை ஈ.எஸ்.ஐ. அறிவித்துள்ளது. அந்த திட்டத்திற்கு பெயர், 'Atal Bimit Vyakti Kalyan Yojna'. இந்த திட்டத்தின் மூலம் பணி இழக்கும் ஊழியர்கள் 2 வருடங்களுக்கு மாதந்தோறும் நிதி உதவி பெறலாம். கடைசியாக பணிபுரியும்போது வாங்கிய 90 நாள் ஊதியத்தில் 25 சதவீதம் கணக்கிடப்பட்டு மாதந்தோறும் வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பத்தை www.esic.nic.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்து ஏதேனும் ஒரு ஈ.எஸ்.ஐ. கிளையில் சமர்ப்பிக்கலாம். இதன் மூலம் வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு தங்கள் குடும்பத் தேவையை ஓரளவேனும் பூர்த்தி செய்திட இந்த தொகை உதவும் என தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.