மனிதர்களின் தலைகளை வெட்டி கால்பந்து விளையாடிய கொடூரம்! சிறையில் அரங்கேறிய நெஞ்சை உறைய வைக்கும் பயங்கரம்!

பிரேசில் நாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் இரு குழுக்களாக பிரிந்து அவர்களுக்கிடையே மோதிக் கொண்டுள்ளனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்டவர்களின் தலைகளை வைத்து கால்பந்தாட்டம் விளையாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


பிரேசில் உள்ள ஒரு பிரபலமான சிறைச் சாலையில் சுமார் 300க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்நிலையில் திடீரென அவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு குழுக்களாக பிரிந்து அவர்கள் ஒருவரை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கி கொண்டனர்.

பிரேசிலில்  ரிஜினல் ரெகவரி சென்டர் எனும் சிறைச்சாலை உள்ளது. பல்வேறு குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர்கள் இந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் இதில் இரு குழுக்களாகப் பிரிந்து கைதிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

அப்போது சுமார் 16 பேரின் தலை துண்டிக்கப்பட்டது. மேலும் கலவரத்தில் சுமார் 57 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து கொல்லப்பட்டவர்களின் தலைகளை மற்றொரு குழுவினர் காலில் உதைத்து கால்பந்தாட்டம் விளையாடியுள்ளனர் இதனை வீடியோவாக பதிவு செய்தார் நபர் ஒருவர் அதை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார்.

இந்நிலையில் இந்த கொடூரமான சம்பவத்தைப் சமூக வலைதளங்களில் பார்த்த பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோவில் ஏராளமானோர் சிறையின் மேல் பகுதியில் நின்று கொண்டிருப்பது போலவும் பலர் சண்டையிட்டுக் கொண்டு இருப்பது போலவும் வீடியோவில் காண முடிகிறது. இதையடுத்து துண்டிக்கப்பட்ட தலையை வைத்து கால்பந்து ஆட்டம் விளையாடுவதும் தெளிவாக தெரிகிறது.