வடகலை, தென்கலை பஞ்சாயத்து மீண்டும் ஆரம்பம்! காஞ்சிபுரத்தில் கெட்ட் வார்த்தை பேசிய அர்ச்சகர்கள்!

வேலையில்லா திண்டாட்டம், வெங்காய விலை உயர்வு, விவசாயிகள் சிக்கல் என்று எத்தனையோ விஷயங்க்ள் நடந்துகொண்டு இருக்கும்போது, மீண்டும் காஞ்சிபுரம் கோயிலில் வடகலை, தென்கலை மோதல் ஏற்பட்டு பக்தர்களை பஞ்சர் ஆக்கியிருக்கிறார்கள்.


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பூதத்தாழ்வார் பிறந்த நட்சத்திரத்தை ஒட்டி சாத்துமுறை உற்சவம் நடைபெற்றது. அப்போது உற்சவ மூர்த்திகள் முன்பு அர்ச்சகர்களில் ஒரு பிரிவினர் பிரபந்தம் பாட முயற்சிக்க, அதற்கு மற்றொரு பிரிவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதையடுத்து இரண்டு தரப்பினருக்கும் இடையில் கடுமையான வார்த்தைகள் மோதல் ஏற்பட்டது. கோயிலுக்குள் காதில் கேட்கமுடியாத கெட்ட கெட்ட வார்த்தைகளால் ஒருவரையொருவர் திட்டி பக்தர்களை சங்கடப்படுத்தினார்கள்.

இவர்களை சமாதானப்படுத்த கோயிலுக்குள் போலீஸ் நுழைந்த பிறகும் இரண்டு கும்பலும் அடங்குவதாக இல்லை. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக இரண்டு கும்பலுக்கும் மோதல் ஏற்பட்டது.

அதன்பிறகு இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் வந்து எச்சரிக்கை செய்யவும், இரண்டு குழுவினருமே போட்டி போட்டுக்கொண்டு பிரபந்தங்களைப் பாடிவிட்டு கலைந்து சென்றார்கள்.

இந்த கெட்டவார்த்தை பேசும் அர்ச்சகர்கள் வாயில் இருந்து வரும் பிரபந்தத்தை கேட்கத்தான் கடவுள் ஆசைப்படுகிறாரா..?