மிகமிக ஆபத்தானவர் தயாநிதி மாறன்! திகில் கிளப்பும் ஆதாரங்களுடன் மத்திய சென்னையை எச்சரிக்கும் பத்திரிகையாளர்!

பத்திரிகையாளரான சாவித்திரி கண்ணன் இன்று வெளியிட்டிருகும் ஒரு பதிவில் மத்திய சென்னை வாக்காளர்கள் எத்தனை பெரும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை விளக்குகிறார். இதோ அவரது பதிவு.


யார் வர வேண்டும் என்று விருப்பட்டு ஒட்டு போடும் வாய்ப்பு இன்று மிகக் குறைந்துவிட்டது.பெரும்பாலும் யார் வரக் கூடாது என கறாராக முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த சூழலில் ஒரு பெரிய ஆபத்தை எதிர்க்க சிறிய ஆபத்து பரவாயில்லை..என சமாதானப் பட்டுக் கொள்கிறோம்.

ஆனால்,மத்திய சென்னை வாக்காளர்களுக்கு அந்த வாய்ப்பும் மறுக்கபட்டுள்ளதாக உணர்கிறேன். தி மு கவில் எத்தனையோ நல்ல திறமையும் நேர்மையும் ஒருங்கே அமைய பெற்றவர்கள் இருக்கும் போது மத்திய சென்னையில் தயாநிதி மாறனுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு என்பது அக் கட்சி தனக்குத் தானே வைத்துக் கொண்ட சூனியம் அல்லாது வேறல்ல..!

ஒருவரை மறுதலிப்பதற்கு சொல்லப்படும் நேர்மையற்றவர், ஊழல்வாதி என்ற காரணங்களையெல்லாம் கடந்து,பார்க்கப்பட வேண்டிய பேராபத்துமிக்கது ,மாறன் சகோதரர்களின் கடந்த காலம்...! ஊடகத் துறையில் இவர்கள் செய்த அரஜாகத்தைப் போல - மற்றவர்களை அழித்து,துவம்சம் செய்து தங்கள் சாம்ராஜ்யத்தை - நிலை நாட்டியதை போல உலகில் எங்குமே நிகழ்ந்திருக்காது.

இது குறித்து, சன் குழும சதிகளும் தி.மு.க.வின் திசை மாற்றமும் என்ற நூலை 2007ம் ஆண்டு கொண்டுவந்தேன்.  மிகப் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய அந்த நூல் பல லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன.அதுவும் தி மு கவினர் தான் இந்த நூலை அதிகம் வாங்கி வாசித்தனர். தகவலறிந்து அன்றைய முதல்வர் கருணாநிதியும் தலைமைச் செயலக பணியாளர்களை அனுப்பி புத்தகம் வாங்கினார்.

2012 ஆம் ஆண்டு மாறன் பிரதர்ஸ் வழியையே அச்சுபிசகாமல் ஜெயலலிதாவும் பின்பற்றி அரசு கேபிள் வழியாக அராஜகத்தை நிலை நாட்டினார். அப்போது கேபிள் தொழிலும் அரசியல் சதிகளும் என்ற நூலைக் கொண்டுவந்தேன். மாறன் சகோதரர்களை பொறுத்த அளவில் அவர்கள் தங்கள் சுய நலத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள். கருணாநிதி குடும்பத்திற்குள்ளே பிளவு ஏற்படுத்தும் நோக்கத்துடன் அழகிரி குறித்தும், கனிமொழி குறித்தும் தவறான செய்திகளை தங்கள் ஊடகங்களில் கசியவிட்டனர்.

ஒரு கட்டத்தில் தி மு கவிற்கு எதிராக திசை மாறி அ தி மு க வை ஆதரிக்க தயாராகி, ஜெயலலிதாவை சந்திக்க தூது மேல் தூது விட்டனர். ஆனால், ஜெயலலிதா உறுதியுடன் மறுத்துவிட்டார். தற்போதுதயாநிதிமாறன்ஜெயித்துவிட்டால்,டெல்லியில் ஒரு பவர்புல் லாபியை கிரியேட் செய்வார். .அப்போது ஒட்டுமொத்த ஊடகத் துறையின் ஜனநாயகத்திற்கும்,சுதந்திரத்திற்கும் கடும் அச்சுறுத்தல் ஏற்படும்.

ஒரு மக்கள் விரோத தீய சக்தி எந்த கட்சியின் பிரதி நிதியாக வந்தாலும்,எந்த கூட்டணி பலத்துடன் நின்றாலும் மக்கள் ஓட்டு விழவே விழாது...என்று நிருபித்து காட்ட வேண்டிய அவசியம். மத்திய சென்னை வாக்காளர்களுக்கு உள்ளது. அதை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன்.!