மகாராஷ்டிரா முதல்வர் பதவி ஏற்புக்கு மிகவும் நல்லபிள்ளையாக தேவேந்திர பட்னாவிஸ்க்கு வாழ்த்து தெரிவித்து, நாங்கள் இன்னமும் பா.ஜக.வின் அடிமைதான் என்று எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் உறுதி செய்துவிட்டனர்.
மராட்டியத்தில் ஜனநாயக படுகொலை! கூட்டணியில் இருந்து கொண்டே பாஜகவை கிழிகிழி!
இதுகுறித்து பேசவேண்டிய தர்மசங்கடத்துக்கு ஆளான அன்புமணி ராமதாஸ், ‘கவர்னர் இத்தனை அவசரப்பட்டு காலையில் பதவிப் பிரமாணம் செய்து வைத்திருக்கத் தேவையில்லை” என்று சுற்றிவளைத்து பதில் சொல்லிவிட்டுப் போனார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா ஏனோ செமையாக பொங்கிவிட்டார். ‘’இரவோடு இரவாக ஜனநாயகப் படுகொலை நடந்திருக்கிறது. இந்த விமர்சனத்தை கவர்னர் தடுத்திருக்க வேண்டும்” என்று காட்டமாகவே மோடிக்கு எச்சரிக்கை செய்தார்.
கூட்டணிகள் அத்தனை பேரும் மோடிக்கு ஜால்ரா போட, பிரேமலதா மட்டும் என்ன தைரியத்தில் எதிர்த்துப் பேசினார் என்று தெரியாமல் அ.தி.மு.க. மண்டையை உடைத்துக்கொண்டு திரிகிறது.