தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி கூறியது பச்சைப் பொய் என்று பிரேமலதா விஜயகாந்த் சூசகமாக கூறியுள்ளார்.
கேப்டன் சந்திப்பு பற்றி ரஜினி கூறியது பச்சைப் பொய்! போட்டுத் தாக்கிய பிரேமலதா!
சென்னையில் நேற்று முன் தினம் விஜயகாந்தை அவரது வீட்டில் சந்தித்து ரஜினி பேசினார். சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. கேப்டன் – ரஜினி சந்திப்பின் போது பிரேமலதா உடன் இருந்தார்.
20 நிமிட சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, கேப்டன் உடல் நிலை குறித்து விசாரிக்க வந்ததாக கூறினார். மேலும் தான் மருத்துவமனையில் இருந்த போது முதல் ஆளாக வந்து சந்தித்து நலம் விசாரித்தது கேப்டன் தான் என்றும் விஜயகாந்த் தெரிவித்தார்.
மேலும் முழுக்க முழுக்க கேப்டன் உடல் நிலை குறித்து பேசவே
வந்ததாகவும் சந்திப்பின் போது அரசியல் எதுவும் பேசப்படவில்லை என்றும் ரஜினி கூறினார்.
விஜயகாந்துடனான சந்திப்பில் துளி கூட அரசியல் இல்லை என்றும் கூறிவிட்டு ரஜினி புறப்பட்டார்.
ஒரு அரசியல் கட்சித் தலைவரான விஜயகாந்தை அரசியலில் ஈடபட முடிவெடுத்துள்ள
ரஜினி சந்தித்த போது அரசியல் பேசப்படவில்லை
என்று கூறியதை யாரும் நம்பவில்லை. இந்த நிலையில்
பிரேமலதா சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது ரஜினி கேப்டன் உடல் நிலை குறித்து விசாரித்ததாக பிரேமலதா
தெரிவித்தார். அதற்கு அப்பாற்பட்டு கேப்டன் – ரஜினி அரசியல் பேசியதாகவும் பிரேமலதா
கூறினார்.
பிரேமலதாவின் இந்த பேட்டியின் மூலம் விஜயகாந்த் சந்திப்பை
தொடர்ந்து ரஜினி கூறியது பச்சைப் பொய் என்பது தெரியவந்துள்ளது. அதே சமயம் கேப்டனை சந்தித்த
திருநாவுக்கரசர் கேப்டனுடன் அரசியல் பேசியதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.