ஸ்டாலின் யோக்கியன் போல் பேசுகிறார்! ஆனால் துரைமுருகனிடம் கோடிகோடியாக சிக்குகிறது! வெளுத்து வாங்கிய பிரேமலதா!

கருத்து கணிப்பு மீது எங்களுக்கு நம்பிகையில்லை கருத்துகணிப்பு கேள்வி குறியானது பிரேமலதா விஜய்காந்து காரைக்குடியில் பேட்டி அளித்துள்ளார்.


காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: கருத்து கணிப்பை விட மக்களின் கணிப்பு தான் வெற்றி பெரும். எங்களை பொருத்தவரை 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெரும்.  போகும் இடம் எல்லாம் மக்கள் எழுச்சி சிறப்பாக உள்ளது. இந்த கூட்டணியை மக்கள் வரவேற்கிறார்கள் உறுதியாக 40 தொகுதியையும் வென்று எடுப்போம். 

கேப்டன் அமேரிக்க சென்று வந்த பின்பு தற்போது ஓய்வில் இருக்கிறார் கேப்டன் நல்ல இருக்கிறார் அவரது பிரச்சாரம் எப்போது என்று தலைமை கழகம் அறிவிக்கும்.  வருமான வரித்துைறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை செய்துள்ளனர். ரெயிடு போய் ஒரு கட்சியை பலி வாங்குவது என்பது எல்லாம் கிடையாது.

சோதனையில் கோடிக் கணக்கன ரூபாய் பதுக்கி வைத்தது உண்மை. கோடி கணக்கான ரூபாய் பதுக்கியது வெளியே வந்து விட்டது. எவ்வளவு தான் அவர் யோக்கியர்கள் போல் பதில் சொன்னாலும் துரைமுருகன் எவ்வளவு பதுக்கி உள்ளார் என்று வெட்ட வெளிச்சமாகி உள்ளது.  இது ஒரு கட்சியை மட்டும் பலி வாங்குவது என்று கிடையாது வருமான வரித்துறை அவர்களுக்கு கிடைக்கும் தகவல் படி அவர்கள் வேலைகளை செய்கிறார்கள்.

மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு. மோடி அவர்கள் ஐந்த ஆண்டுகளில் பல திட்டங்களை செய்துள்ளார். மக்கள் தெளிவாக உள்ளனர். வலிமை மிக்க பிரதமராக மோடி உள்ளார். எதிர் அணியினர் பிரதமர் யார் என்று கூட சொல்ல முடியவில்லை. திமுக போட்டியிடும் அனைத்து தொகுதிக்கும் வருமான வரித்துறையினர் சோதனை செய்யவில்லை அவர்களுக்கு கிடைத்த தகவல் பேரில் ஆய்வு செய்துள்ளனர்.

ப.சிதம்பரம் நிதியமைச்சரக இருந்துள்ளார். என்ன செய்துள்ளார்? என்று இந்த தொகுதி மக்கள் முடிவு செய்ய வேண்டும். என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்