உள்ளாட்சியில் 50% கேட்போம்! தெனாவெட்டாக பேசும் பிரேமலதா!

உள்ளாட்சித் தேர்தல் குறித்து இன்று தே.மு.தி.க. கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா வழக்கம்போல் தெனாவெட்டாகாப் பேசினார்.உள்ளாட்சித் தேர்தலில் எவ்வளவு சீட் கேட்கப்படும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய பிரேமலதா, ‘நாங்கள் 50%கூட கேட்போம். கடந்த தேர்தலின் போது சில குழப்பங்கள் நடைபெற்றது.

அதனால்தான் முன்கூட்டியே ராமதாஸ் கூடுதல் இடம் வாங்கிக்கொண்டு போய்விட்டார். ஆனால், இந்தத் தேர்தலில் அப்படியெல்லாம் நடக்காது. ஏனென்றால் விஜயகாந்த் விக்கிரவாண்டியில் பிரசாரம் செய்ததற்கே பெரும் வெற்றி கிடைத்தது என்று வெற்றிக்கு சொந்தம் கொண்டாடினார்.

இப்போதைய ஆட்சி எப்படியிருக்கிறது என்று கேட்டபோது, ‘‘பொதுவாக பரவாயில்லை என்றாலும் மர்மக்காய்ச்சல், ரோடு போன்ற விஷயங்களை சரியாக கையாள வேண்டும்’’ என்றார். அதேபோன்று திருவள்ளுவர் விவகாரத்தை எந்தக் கட்சியும் சொந்தம் கொண்டாடக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

உள்ளாட்சித் தேர்தல் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டால், எடப்பாடிக்குப் பெரிய தலைவலியாக பிரேமலதா இருப்பார் என்பது இன்று மிகத்தெளிவாக உறுதியானது.