கர்ப்பிணி பூனையை உயிரோடு தூக்கில் தொங்கவிட்ட கொடூரர்கள்..! துடியாய் துடிப்தை பார்த்து ரசித்த விபரீதம்! நெஞ்சை உலுக்கம் சம்பவம்!

திருவனந்தபுரம்: கர்ப்பமாக இருந்த பூனையை கயிற்றில் தொங்கவிட்டு கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பால்குலங்காரா பகுதியில் இத்தகைய குரூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள குடோன் ஒன்றின் இரும்புத் தூணில் கயிற்றை கட்டி, அதில் பூனையை தூக்கில் ஏற்றியதுபோல வைத்து, யாரோ ஒருவர் கொலை செய்துள்ளார். இறந்து கிடந்த பூனையின் உடல் துர்நாற்றம் வீசவே, அக்கம் பக்கத்தினர் இதனை பார்த்து, விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, அங்கு வந்த இந்திய விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் பார்வதி மோகன் மற்றும் விலங்குகளுக்கான மக்கள் அமைப்பின் செயலாளர் லதா ஆகியோர் போலீசில் புகார் செய்தனர்.  

போலீசார் விரைந்து வந்து பூனையின் சடலத்தை பறிமுதல் செய்ததோடு, அதுபற்றி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல்கட்டமாக, பூனையின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட குடோன், பொது நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதியாக பயன்படுத்தப்படுவது வழக்கம்.

இதுதவிர மற்ற நாட்களில் அங்கு உள்ளூர் நபர்கள் கூடி மது அருந்துவதும், சீட்டாடுவதும் உண்டு. அந்த இடத்தின் உரிமையாளர் கூட அதை காரியத்தைச் செய்பவராக உள்ளார். வழக்கம்போல, வார விடுமுறையில் இவ்வாறு மது அருந்திவிட்டு சீட்டாடிய சிலர் அந்த குடோனில் தங்கியிருந்த பூனையை பார்த்ததும் விளையாட்டிற்கு கயிற்றில் கட்டி தொங்க விட்டிருக்கின்றனர். ஆனால், கர்ப்பமாக இருந்த பூனை எதிர்பாராவிதமாக உயிரிழந்துவிட்டது.

இதனைக் கண்டதும் அந்த நபர்கள் தப்பியோடிவிட்டனர் என, அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்ததில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் இச்செயலை செய்த நபர்களை தேடிவருகின்றனர்.