சாம் குரானை கட்டிப்பிடித்து குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட ப்ரீத்தி ஜிந்தா!

கிங்ஸ் XI பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ipl போட்டியில் கிங்ஸ் XI பஞ்சாப் அணி எதிர்பாராமல் அதிரடியாக வெற்றி பெற்றது .


இதற்கு காரணமான சாம் குரானை அந்த அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா கட்டிப்பிடித்து அவரின் பாராட்டுகளை அவருக்கு தெரிவித்தார். மேலும் அவருடன் பாங்ரா நடனமாடியது சமூக வலைத்தளங்களில்  ட்ரெண்டிங் ஆக  உள்ளது  .

பொதுவாக கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் வீரர்கள் யாராவது சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தால் மகிழ்ச்சியில் அந்த அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா கட்டிப்பிடித்து அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவிப்பார்.

இது போலவே நேற்றைய போட்டியில் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்து அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த சாம் குரானை மகிழ்ச்சியில் அந்த அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா கட்டிப்பிடித்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். நேற்றைய போட்டியில் கிங்ஸ் XI பஞ்சாப் அணி தோல்வி அடையும் நிலையில் இருந்தது. அ

ந்த நேரத்தில் எதிரணியின் விக்கெட்களை  சரசரவென வீழ்த்தி அசத்தலான வெற்றியை அடைந்தனர். கிங்ஸ் XI பஞ்சாப் அணி கடைசி நேரத்தில் 8 ரன்களை மட்டும் விட்டு கொடுத்து எதிரணியின் 7 விக்கெட்களை தூக்கினர். இதில் சாம் குரான் 4 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார். இதில் ஒரு ஹாட் ட்ரிக் விக்கெட்டும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.