சமீபத்தில் அரசியல் களத்தில் அதிகம் பேசப்படும் பெயர் பிரசாந்த் கிஷோர்.
கத்துக்குட்டி கமல்! அரசியல் தரகர் பிரசாந்த்! ஒன்று சேர்த்தது யார்? அதிர்ச்சி ரிப்போர்ட்!

யார் இவர்? அரசியல் ஆலோசகர் என்று சொல்லிக்கொள்ளும் தரகர். தன்னுடைய வாடிக்கையாளரை வெற்றி பெற வைப்பதற்காக எதையும் செய்வதற்காக இந்தியல் பொலிடிகல் ஆக்ஷன் கமிட்டி என்ற பெயரில் அமைப்பு வைத்துள்ளார். இவரது ஆலோசனையை பெற்றே, மோடி ஒரு முறை குஜராத் முதல்வராகவும், பிறகு பிரதமராகவும் வெற்றி வாகை சூடினார். நிதிஷ்குமாரின் பீகார் வெற்றியிலும் இவரது பங்களிப்பு உண்டு .சமிபத்தில் ஆந்திராவில் வெற்றி பெற்ற ஜகன் மோகன் ரெட்டியும் இவரது கஷ்டமர் தான்!
இந்த பிரசாந்த் கிஷோரைத் தான் சமிபத்தில் டெல்லி சென்று மோடியை சந்தித்த பிறகு, எடப்பாடி பழனிச்சாமியும் சந்தித்துள்ளார். எடப்பாடி சந்தித்த பிறகு ,பிரசாந்த் கிஷோர் சென்னை புறப்பட்டு வந்து கமலஹாசனை சந்தித்துள்ளார். இரண்டு மணி நேரம் நீண்ட நெடிய ஆலோசனையையும் நடத்தியுள்ளார்.
பிரசாந்த் கிஷோரை பொறுத்த வரை , பணம் இல்லாமல் ஒரு நொடியையும் யாருக்கும் தரமாட்டார். கமலஹாசனை பொறுத்த வரை அரசியலில் கத்துக்குட்டி. அதேநேரம் தன்னுடைய பணத்தில் பத்து பைசாகூட யாருக்கும் தர மாட்டார்.
இந்த யதார்த்தத்தை கணக்கில் கொண்டு பார்க்கையில் கமலஹாசனின் கிஷோர் சந்திப்புக்கு எடப்பாடியோ, மோடிதான் செலவை ஏற்றிருக்க வேண்டும். அப்படியென்றால் என்ன அர்த்தம்? கமல்ஹாசனுக்கு கொம்பு சீவி என்ன சாதிக்க நினைக்கிறார் மோடி?
காலம்தான் விடை சொல்லும்.