பிரச்சாரத்தில் பிரேமலதாவை நிழலாக தொடரும் பெண்மணி! யார் இவர் தெரியுமா?

தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர பிரச்சாரம் செய்து வரும் பிரேமலதா விஜயகாந்த் ஐ பெண்மணி ஒருவர் நிழல் போல் தொடர்ந்து வருகிறார்.


நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரேமலதா விஜயகாந்த் எங்கு சென்றாலும் அவருடன் பெண்மணி ஒருவர் கூடவே செல்கிறார். பிரச்சார பணியிலும் கூட பிரேமலதாவுடன் அந்தப் பெண்மணி இருக்கிறார்.

பிரேமலதா விஜயகாந்த் செல்லும் ஊர்களில் உள்ள முக்கிய பிரபலங்கள் அவரை வந்து சந்திக்கும் போதும் இந்தப் பெண்மணி உடன் இருக்கிறார். ஆனால் புகைப்படங்களுக்கு அவர் பெரும்பாலும் போஸ் கொடுப்பது இல்லை. முக்கியஸ்தர்கள் வந்து பிரேமலதாவை சந்திக்கும்போது அவர் தள்ளி நின்று கொள்கிறார்.

யார் இந்தப் பெண்மணி என்று தேமுதிக தொண்டர்கள் மட்டுமல்லாமல் அதிமுக கூட்டணியில் உள்ளவர்களுக்கும் கூட கேள்வி எழுகிறது. அவர் யார் என்று விசாரித்த போது தான் அந்தப் பெண்மணி பிரேமலதா விஜயகாந்தின் சகோதரர் சுதீஷின் மனைவி என்று தெரிய வந்துள்ளது.

அந்தப் பெண்மணியின் பெயர் பூர்ண ஜோதி என்பதும் தற்போது மட்டுமல்ல கடந்த காலங்களிலும் கூட தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரேமலதாவுடன் அவர் எப்போதும் உடன் இருப்பது வழக்கம் என்றும் உயர்மட்ட நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். விஜயகாந்திற்கு எப்படி சுதீஷ் ஒரு தளபதி போல் செயல்படுகிறாரோ அதேபோல் பிரேமலதாவுக்கு பிரச்சாரத்தின் போது தேவைப்படும் அனைத்து விவரங்களையும் எடுத்துக் கொடுப்பது பூரண ஜோதி தான் என்கிறார்கள்.