தமிழக அரசின் தலைமைச் செயலராக இருக்கும் கிரிஜா வைத்தியநாதன் பதவிக்கு ஆபத்து எழுந்துள்ளது. யாரால் இந்த ஆபத்து, எதனால் வந்த ஆபத்து என்று தெரிந்தால் ஆச்சர்யமாக இருக்கும்.
கிரிஜா வைத்தியநாதன் பதவி பறி போகுது... ஏன் தெரியுமா?
மத்திய தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் (டிவிஏசி) ஐ.ஜியாக பணியாற்றி வரும் ஐ.பி.எஸ் அதிகாரி முருகன், தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தாக அவருக்குக் கீழ் பணியாற்றிய பெண் எஸ்.பி., கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் கொடுத்தார். இந்த விவகாரம் தற்போது விசாகா கமிட்டி முன்பு நிலுவையில் உள்ளது.
அதன்பிறகு அதிரடி நடவடிக்கையாக புகார் கொடுத்த பெண் அதிகாரி வேறு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், புகாருக்குள்ளான ஐ.ஜி. முருகன் தொடர்ந்து அதே துறையில் வருகிறார். இது பெண் எஸ்.பி.க்கு கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டதாம். அதனால் காவல் துறையில் பணியாற்றும் பல பெண் உயரதிகாரிகளின் ஆதரவை கோரியிருக்கிறார். அனைவரும் பெண் எஸ்.பி.க்கு உதவுவதாக உறுதி அளித்துள்ளனர்.
இதனையடுத்து, ஐ.ஜி.க்கு ஆதரவாக தலைமைச் செயலாளரும், தமிழக அரசும் செயல்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. புகார் அனுப்பியுள்ளார். அதன்பேரில், இந்த விவகாரத்தில் ஐ.ஜி.க்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை உடனே அனுப்ப வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம். இதுவரை தப்பியது போன்று இனிமேலும் அம்மணியால் தப்பிக்க முடியாது என்கிறார்கள்.
ஏனென்றால் மீடூ விவகாரத்தில் சிக்கிய காரணத்தால் ஒரு மத்திய அமைச்சரையே வீட்டுக்கு அனுப்பிவிட்டது மத்திய அரசு. அதனால் இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கையும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும் மத்திய அரசு எதிர்பார்க்கிறது. ஆனால் ஐ.ஜி.முருகனுக்கு ஆதரவாக தமிழக அரசு இருப்பதால், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் முடியாமல் தவிக்கிறார் கிரிஜா.
ஆக, எந்த நேரத்திலும் கிரிஜாவின் பதவி பறிக்கப்படலாம் என்கிறார்கள்.