அப்பாடி அன்புமணிக்கு பதவி கிடைச்சாச்சு! இனிமேலாவது ராமதாஸ் வாயைத் திறந்து திட்டுவாரா?

இத்தனை நாளும் எட்டுவழிச் சாலை, ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு போன்ற விவகாரங்களில் ராமதாஸும் அவரது மைந்தர் அன்புமணியும் அடக்கி வாசித்தனர்.


ஏனென்றால் மத்திய அரசு சிக்கல் உருவாக்கினால், அ.தி.மு.க. ராஜ்யசபா சீட் தராமல் விட்டுவிடும் என பயந்தனர். அதனால் இத்தனை நாளும் அமைதியாக இருந்து இப்போது சீட்டை வாங்கிவிட்டார்கள். பா.ம.க.வில் இருக்கும் ஒரே ஒரு தளபதி, நிர்வாகி, திறமைசாலி, புத்திசாலி அன்புமணிக்கு பதவி கிடைத்துவிட்டது.

இப்போது பா.ம.க.வின் இளைஞரணி செயலாளர் அன்புமணிதான். தேர்தலில் முதல்வர் வேட்பாளரும் அவர்தான். அதில் தோற்றுப் போய் மக்களவை தேர்தல் வந்தால், அப்போதும் வேட்பாளரும் அவரே. அட, அதிலும் தோற்றுப் போனதால் மாநிலங்களவை வேட்பாளரும் அன்புமணிதான்.

தொழில் தொடங்க மகனுக்குப் பணம் கொடுக்கவே தயங்குகிற தந்தைகளுக்கு மத்தியில், ஒரு கட்சியையே தொடங்கி மகனுக்குக் கொடுத்திருக்கிறார் ராமதாஸ். ஏம்பா, கட்சிக்கு நாயா உழைக்கிற நிர்வாகிகள், தொண்டருக்கெல்லாம் என்னப்பா தரப்போறீங்க..?