சாலையில் சென்ற சிறுவனை முள்ளம்பன்றி ஒன்று அமைதியான முறையில் பின்தொடர்ந்து சென்ற வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சாலையில் நடந்து சென்ற சிறுவனை பின் தொடர்ந்து சென்ற விநோத உயிரினம்! காண்போரை பதற வைக்கும் வீடியோ!

சாலையில் நடந்து சென்ற ஒரு சிறுவனின் வேகத்திற்கு இணையாக முள்ளம்பன்றி ஒன்று அவனை பின்தொடர்ந்து சென்றுள்ளது. மேலும், ஒருகட்டத்தில் சிறுவன் அந்த முள்ளபன்றியை பார்த்து ஓட முயற்சிக்கும்போது அதுவும் சிறுவனுக்கு இணையாக வேகமாக ஓடியது. பின்னர் சிறுவன் வேகமாக செல்ல முடியாதால் சிறு நேரம் நின்று நடக்க துவங்கி உள்ளான் இதற்கிடையில், முள்ளம்பன்றியும் பொறுமையாக நடக்க துவங்கி சிறுவனுக்கு இணையாக சென்றுள்ளது.
இந்த காட்சிகளை வனத்துறை அதிகாரி ஒருவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. மேலும், இதனை பலர் பகிர்ந்தும் வருகின்றனர்.