ராமலிங்கம் கொலை வழக்கு! பாஜகவை கிழித்து தொங்கவிடும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா!

இலங்கையில் குண்டு வெடித்ததை அடுத்து, இந்தியாவில் பாதுகாப்பு என்ற பெயரில் இஸ்லாம் இயக்கங்களை முடக்கும் வேலையில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய பாதுகாப்பு அமைப்பு இறங்கியிருப்பதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.


இந்த வழக்கில் தொடர்பு இருக்கிறது என்று திருபுவனம் இராமலிங்கம் படுகொலையை மீண்டும் விசாரிக்கிறது என்.ஐ.ஏ. இதுகுறித்து  பாப்புலர் ஃப்ரண்ட் வெளியிட்டிருக்கும் அறிக்கை இதோ.

எத்தனையோ படுகொலைகள் தமிழகத்தில் நடக்க இந்த வழக்கை மட்டும் NIA விசாரிப்பது ஏன்? BJPயின் அழுத்தத்திற்கு கட்டுப்பட்டு NIA அதிகாரிகள் இதுபோன்ற அவதூறுகளை பாப்புலர் ஃப்ரண்ட்டின் மீது சுமத்தி வருகின்றனர். அதன் பிரதிபலிப்புதான் பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகங்களில் நடந்த சோதனை ஆகும். தேசம் முழுவதும் தொடர்ந்து படுகொலை நிகழ்த்தி வரும் RSS, BJP போன்ற சங்பரிவார அமைப்புகளின் அலுவலகங்களில் என்றேனும் NIA அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளதா? என்ற கேள்வியை நாங்கள் முன் வைக்கின்றோம்.

நாட்டையே உலுக்கிய மாலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு போன்ற குண்டுவெடிப்புகளுக்கு பின்புலமாக இருந்து செயல்பட்டது RSS மற்றும் சங்பரிவாரங்கள்தான் என தெளிவாக தெரிந்த பின்பும் NIA ஆதாரங்களை கொடுக்காமல் குண்டு வைத்த குற்றவாளிகளின் விடுதலைக்கு துணைபோயுள்ளது என்ற விவாதம் தேசம் முழுவதும் நடந்து வருகின்றது. BJP யின் கைப்பாவையாக NIA செயல்பட்டு வருகின்றது என்ற குற்றச்சாட்டு காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்கட்சிகளாலும் முன்வைக்கப்படுகின்றது.

நீதிக்கு புறம்பான இத்தகைய செயல்பாடுகளை மறைப்பதற்காகவும், திசை திருப்பும் விதத்திலும் தேவையில்லாத பரபரப்புகளை NIA அதிகாரிகள் தேசம் முழுவதும் ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதிதான் பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனை ஆகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்திருக்கிறார்கள்.