ஏழை தாத்தா திடீர் மரணம்! வீட்டுக்குள் எக்கச்சக்க ரூபாய்கள்!

இறந்துபோன ஏழை புரோகிதர் வீட்டில் பண மூட்டைகள்!


ஆந்திரமாநிலம் கோதாவரி மாவட்டம் துனி என்கிற ஊரைச் சேர்ந்த ஏழை புரோகிதர் சுப்பிரமணி. இவர் அதே ஊரில் உள்ள கோவில் ஒன்றில் பூஜைகள் செய்து வந்தார்.வயது மூப்பின் காரணமாக பூஜைகளை சரிவரச்செய்ய முடியாததால் அந்த வேலையை விட்டு நின்றுவிட்டார்.

சில ஆண்டுகள் முன்பு மனைவியும் இறந்துவிட தனியே வசித்து வந்தார் சுப்பிரமணி.அவருடைய ஒரே மகன் திருமணமாகி அனகாபள்ளியில் வசித்து வருகிறார். 70 வயது கடந்த நிலையில் மிகவும் நலிவுற்ற சுப்பிரமணிக்கு அக்கம்பக்கத்தினர் உணவும் , பணமும் கொடுத்து ஆதரித்து வந்திருக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றி இருந்த சுப்பிரமணி நேற்று முந்தினம் மரணமடைந்தார்.இது குறித்து அவரது மகன் மற்றும் உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.அனைவரும் வந்து இறுதிச்சடங்குகளை ச் செய்து முடித்த பிறகு சுப்பிரமணி வசித்த பாழடைந்த வீட்டை சுத்தம் செய்து அவருடைய பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் இறங்கினர்.

அப்போது பல சிறுசிறு துணி மூட்டைக்கள் கிடைத்தன,அவற்றை பிரித்துப் பார்த்தபோது அவற்றுள் கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகள் இருந்திருக்கின்றன.மிகவும் அதிகமாக இருந்ததால் பணம் என்னும் இயந்திரத்தை பயன்படுத்தி எண்ணி இருக்கிறார்கள். அந்த மூட்டைகளில் 5 லட்சத்துக்கு மேல் பணம் இருந்திருக்கிறது.

இந்தப் பணம் அவர் கோவிலில் பணியாற்றிய போது கிடைத்ததாக இருக்கவேண்டும் என்று தெரிகிறது. அவ்வப்போது சின்ன சின்ன மூட்டைகளாக கட்டி வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்த ஊர்மக்கள் அந்தப் பணத்தை சுப்பிரமணியின் மகனிடம் ஒப்படைத்தனர்.அதைப் பெற்றுக்கொண்ட அவரது மகன் , அந்தப் பணத்தை தன் தந்தையை போன்ற ஏழை புரோகிதர்களுக்கு கொடுத்து உதவப்போவதாக சொல்லி இருக்கிறார்.