ஒன்னே முக்கால் லட்சம் ரூபாய்க்காக அமலா பால் செய்த செயல்! விஸ்வரூபம் எடுக்கும் பென்ஸ் கார் விவகாரம்!

நடிகை அமலாபால் பணத்தை மிச்சப்படுத்தவும், வரி ஏய்ப்பு செய்யவும்தான் புதுச்சேரியில் போலி முகவரி தயாரித்து காருக்கு அந்த மாநில பதிவெண் பெற்றதாக போலிஸ் குற்றம்சாட்டியுள்ளது.


அமலாபால் என்றால் இன்றைய தேதிக்கு அறிமுகம் தேவை இல்லை. அதற்கு காரணம் சமீபத்தில் பொட்டு துணி இல்லாமல் அவர் நடித்த ஆடை படம். சினிமாவே பார்க்காதவர்கள் கூட ஒருமுறையாவது அமலாபாலை பார்த்துவிட வேண்டும் என ஆடை படத்தை பார்த்து வரவேற்பு கொடுத்துள்ளனர். 

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் நடிகை அமலாபாலுக்கு கேரளா பூர்வீகம் கடந்த சில வருடங்களுக்கு முன் 1.12 கோடி ரூபாய் மதிப்புள்ள எஸ் கிளாஸ் பென்ஸ் காரை புதுச்சேரியில் வாங்கினார் அமலாபால். கேரளாவில் வாகன பதிவெண் பெற ரூ.20 லட்சம் வரி செலுத்த வேண்டும்.

ஆனால், யூனியன் பிரதேசம் என்பதால் புதுச்சேரி லாஸ்பேட்டையில் வசிப்பதாக போலி ஆவணங்களைக் காட்டி அமலாபால் கார் பதிவெண் பெற்றதாக தகவல்கள் வெளியானது. ஏன் என்றால் புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை வாகன பதிவுக்கு 1.75 லட்சம் ரூபாய் செலுத்தினால் போதும்.

கேரள மோட்டார் வாகனப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நடிகை அமலாபால் பணத்தை மிச்சப்படுத்தவும், வரி ஏய்ப்பு செய்யவும்தான் புதுச்சேரியில் போலி முகவரி தயாரித்து காருக்கு அந்த மாநில பதிவெண் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. அமலாபால் மட்டுமல்லாது நடிகை நஸ்ரியாவின் கணவர் ஃபகத் ஃபாசில், பி.ஜே.பி எம்.பி-யும் நடிகருமான சுரேஷ்கோபி ஆகியோரும் இதுபோன்று மோசடி செய்த விஷயம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த வழக்கை கேரள குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். நடிகை அமலாபால் கார் பதிவு செய்தது புதுச்சேரி மாநிலம் என்பதால் அம் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி போக்குவரத்துத் துறைக்குக் கேரள போலீஸ் கடிதம் அனுப்பி உள்ளது.  

அதுபோல பகத் பாசில் தனது காரை பதிவு செய்வது சம்பந்தமான பணிகளை வேறு சிலர் கவனித்துக் கொண்டதாகக் கூறி அபராதம் செலுத்தியதால் அவர் மீதான வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. அதேசமயம் போலி ஆவணம் தயாரித்தல் போன்ற குற்றங்கள் இருப்பதால் நடிகர் சுரேஷ் கோபிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து விசாரிப்போம் என கேரள போலீசார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

சினிமாவில் வில்லன் வரி ஏய்ப்பு செய்தால் போலீசாகவும், கலெக்டராகவும், சமூக ஆர்வலராகவும் சென்று கதநாயகர்கள் நடவடிக்கை எடுத்து அவனை சிறையில் தள்ளுகிறார்கள். ஆனால் கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் 20 லட்சம் வரி செலுத்த தயங்குகிறார்கள். இவர்களுக்கு யார் வில்லனாக வருவது?