பெற்ற தாய் என்றும் பாராமல் மகன் செய்த விபரீத செயல்! பொள்ளாச்சியை அதிர வைத்த சம்பவம்!

வேலைக்குப் போகச் சொன்ன காரணத்திற்காக, தாய் என்றும் பாராமல் பட்டதாரி இளைஞர் ஒருவர் அடித்துக் கொன்றுள்ளார்.


பொள்ளாச்சி அருகே உள்ள வேலாம்பட்டி செல்வகணபதி நகரைச் சேர்ந்தவர் செல்லம்மாள். இவரது கணவர் பெருமாள்சாமி சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவருக்கு ஒரே மகன் மௌனகுரு சாமி. பிஎஸ்சி படித்துள்ள மௌனகுரு சாமி, எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

அவரை வேலைக்குப் போகும்படி செல்லம்மாள் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார். இதன்பேரில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவது தொடர்கதையாக இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று சனிக்கிழமை காலை வழக்கம்போல, வேலைக்குச் செல்லும்படி மௌனகுருவை, அவரது தாய் வலியுறுத்தியுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மௌனகுரு, சுவற்றில் பிடித்து, தனது தாயை தள்ளியுள்ளார். பின்னர், மரக்கட்டை ஒன்றை எடுத்து, பலமாக அடித்துள்ளார்.

இதில், தாய் செல்லம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் மௌனகுருவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பெற்ற தாயை மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.