பொள்ளாச்சி பெண்கள் ஆபாச வீடியோ! பிரபல அரசியல் தலைவரிடம் மணிக்கணக்கில் போலீஸ் விசாரணை!

பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் பலாத்கார வீடியோ வெளியான விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பொள்ளாச்சி ஜெயராமனிடம் போலீசார் மணிக்கணக்கில் விசாரணை நடத்தியுள்ளனர்.


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து துணை சபாநாயகர் அளித்த புகாரில் அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தன் மீதும் தன் குடும்பத்தினர் மீதும் சிலர் சமூக வலைதளத்தில் தொடர்ந்து அவதூரான கருத்துக்களை பரப்பி வருவதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். 

அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து கொண்டு நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பொள்ளாச்சி ஜெயராமனுடைய வீட்டில் வைத்து அவரிடம் சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளனர். 

விசாரணையின்போது தன் மீதும் தன் குடும்ப உறுப்பினர்கள் மீதும்சமூக வலைதளத்தில் யார் யார் இதை பரப்பினார்கள் என்றும அதன் பின்புலம் என்னவென்றும் அது தொடர்பான முக்கியமான பல ஆவணங்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள்.

இந்நிலையில்  பொள்ளாச்சி ஜெயராமனிடம் இருந்து பெற்ற ஏராளமான ஆவணங்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் அடுத்த கட்டமாக பொள்ளாச்சி ஜெயராமன் புகார் கூறியுள்ள நக்கீரன் கோபால், ஸ்டாலின் மருமகன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற உள்ளது என்று சொல்கிறார்கள்.