நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம்! நடிகை பிக்பாஸ் மும்தாஜ் வெளியிட்ட அதிரடி தகவல்!

பொள்ளாச்சியில் பெண்களை காதலிப்பது போல் ஏமாற்றி பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தி அதை வீடியோ எடுத்து மிரட்டி வந்த சம்பவங்கள் தற்போது திரைப்படமாக தயாராக உள்ளது.


கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த தொடர் பாலியல் சம்பவங்கள் பிப்ரவரி மாதம் பொள்ளாச்சியில் ஒரு மாணவியின் புகார் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. பேஸ்புக் மூலம் பெண்களை மடக்கி, அவர்களை பாலியல் ரீதியாக கொடுமை செய்த நபர்களை சமூகத்திற்கு அடையாளம் காட்டியது அந்த ஒரு பெண்ணின் புகார். வெளியில் சொன்னால் அவமானம் என பல பெண்கள் புகார் கொடுக்காமலேயே இருந்து விட்டனர். 

இந்த பிரச்சனை தொடர்பாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து எதிர்ப்பு குரல் எழுந்த நிலையில் குற்றவாளிகள் சிலரை கைது செய்து சிறையில் அடைத்தது போலீஸ். இந்த சம்பவத்தில் சில பணக்காரர்களும், அரசியல்வாதிகளும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பொள்ளாச்சி சம்பவம் தற்போது திரைப்படமாக உருவா உள்ளது.

'கருத்துகளை பதிவு செய்' என பெயரிடப்பட்டுள்ள இந்த சினிமாவை ராகுல் பரம்சா இயக்குகிறார். எஸ்.எஸ்.எஸ். ஆர்யன் கதாநாயகனாகவும், உபா சனா எனும் புதுமுகம் நாயகியாகவும் நடிக்கின்றனர். ஆர்பிஎச் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மும்தாஜ் படத்தை தயாரிக்கிறார். கணேஷ் ராகவேந்திரா பாடல்களுக்கு இசையமைக்கிறார்.

இது குறித்து பேசிய இயக்குனர் ராகுல் பரம்சா, இந்த படத்தை எடுத்தால் எனக்கு மிரட்டல் வரும் என்று என் நண்பர்கள் தெரிவித்தார்கள். ஆனால் சமூகத்திற்கு நல்ல படம் தர வேண்டும் என்ற நோக்கம்தான் எனக்கு. அனைத்து பெண்களும் இப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் என்றார்.