பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.
பொள்ளாச்சி பெண்கள் பலாத்காரம்! காங்., தலைவருக்கும் தொடர்பு? திருநாவுக்கரசு வெளியிட்ட திடுக் தகவல்!
பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு மிரட்டப்பட்ட வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாரின் பெயர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மயூரா ஜெயக்குமார் காங்கிரஸ் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட போது அவரை சந்தித்து திருநாவுக்கரசு வாழ்த்து தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் 25ஆம் தேதி கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த மயூரா ஜெயக்குமார், அண்மையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னதாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக இவர் இருந்தார்.