பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - 'பார்'நாகராஜனின் பாரை நொறுக்கிய மக்கள்!!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த 'பார்' நாகராஜனின் மதுபானக்கடையை மக்கள் அடித்து நொறுக்கினர்


பொள்ளாச்சியில் கல்லூரிப் பெண்கள், பணிக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பெண்களுடன் ஃபேஸ்புக் மூலம் பழகி ஒரு கும்பல் ஆபாச வீடியோ எடுத்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின்  புகாரின் பேரில் சபரிராஜன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தக்குமார் என்ற நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் 4 பேர் மீது குண்டர் சட்டத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின்  சகோதரரை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் 'பார்' நாகராஜன் என்பவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் . இந்த நபர் பொள்ளாச்சி கோட்டூர் சாலையில் அரசு மதுபானக் கடை ஒன்றின் உள்ளே இருக்கும் பாரை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். 

இன்று இவரதுபாருக்குள் புகுந்த ஏராளமான மக்கள் பாரை அடித்து நொறுக்கினர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.