காதல் பரிதாபம்! போனை கட் செய்த காதலி! விரக்தியில் துப்பாக்கியால் சுட்டு செத்த காதலன்!

கன்னியாகுமரி மாவட்டம் நடைக்காவு பகுதியை சேர்ந்தவர் அஜின் ராஜ் 28, இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் இடையே காதல் இருந்து வந்துள்ளது.


இதையடுத்து அந்தப் பெண்ணிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக பணியின்போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் உடன் இருந்த காவலர்கள் மத்தியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜின் ராஜ் கடந்த 2018ல் காவலர் பணிக்கு சேர்ந்து நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு 9வது பட்டாலியனில் பணிபுரிந்து வந்தார்.

அஜின் ராஜ்  கடந்த  சில நாட்களுக்கு முன்னர்  விடுப்பு எடுத்து தனது சொந்த ஊருக்கு சென்று உள்ளார். அங்கு  அவரது உறவுக்காரப் பெண் ஒருவரை  காதலித்து வந்துள்ளார் இவர்களது காதல்  சில தினங்கள் நன்றாகவே சென்ற நிலையில்  இருவருக்குமிடையே  சிறுசிறு சண்டைகள் ஏற்பட்டு உள்ளது. கடந்த 21 நாள்கள் விடுப்பில் இருந்த அஜின் ராஜ் சில தினங்களுக்கு முன்னர்தான் வேலைக்கு வந்துள்ளார்.இந்த நிலையில் கோதையாறு மின்உற்பத்தி மைய பாதுகாப்புப் பணியில் அஜின் ராஜ் அமர்த்தப்பட்டிருந்தார். தன் பணியில் இருந்தபோது தனது காதலியுடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளார் அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் மிகுந்த வருத்தமடைந்த அஜின் ராஜ் அப்போது பாதுகாப்பிற்கு வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனால் உடன்பணி புரிந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

 இந்த சம்பவம் குறித்து பேச்சிப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.