போலீஸ்காரரின் புதுப் பொண்டாட்டி எடுத்த விபரீத முடிவு! நெல்லையில் பரபரப்பு!

திருநெல்வேலி: திருமணமான 4 மாதத்திலேயே போலீஸ்காரரின் மனைவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


பாளையங்கோட்டையை சேர்ந்த ஜெயசூர்யா (23) என்பவருக்கும், வண்ணார்பேட்டையை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் இடையே, 4 மாதங்கள் முன்பாக, திருமணம் நடந்தது. இதில், முத்துக்குமார் நெல்லை சரக போலீஸ் டிஐஜி முகாம் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று (ஏப்ரல் 20) பணி நிமித்தமாக முத்துக்குமார் வெளியில் சென்றுள்ளார்.

அப்போது, குடும்பத்தில் எதோ கருத்து வேறுபாடு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதன்பேரில், இரவு, வீட்டிலேயே ஜெயசூர்யா தூக்கிட்டு தறகொலை செய்துகொண்டார். காலை விடிந்த பிறகும் அவர் அறையில் இருந்து வெளியே வராத காரணத்தால், வீட்டில் உள்ளவர்கள் சந்தேகமடைந்து, கதவை உடைத்து பார்த்துள்ளனர். அங்கே மின்விசிறியில் ஜெயசூர்யா சடலமாக தொங்கியதை பார்த்து, உடனடியாக, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, விசாரணை மேற்கொண்டுள்ளதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.