பிக்பாஸ் வீட்டிற்குள் திடீரென நுழைந்த போலீஸ்! மீராவிடம் துருவி துருவி விசாரணை! காரணம் இது தான்!

பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று நடிகை மீரா மிதுனிடம் போலீசார் விசாரித்ததற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.


பிக்பாஸ் வீட்டில் இந்த முறை போலீசார் வருவதும் போவதும் சாதாரண ஒன்றாகிவிட்டது. வனிதா இருந்த வரை அவரது மகள் விவகாரத்தில் விசாரணை நடத்த ஆந்திர போலீசார் உள்ளே சென்று வந்தனர். இந்த நிலையில் சென்னை எழும்பூர் காவல் நிலைய போலீசார் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று வந்துள்ளனர்.

சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் தான் பிக்பாஸ் வீட்டு செட் போடப்பட்டுள்ளது. இங்கு நேற்று பிற்பகல் சென்னை எழும்பூர் போலீசார் திடீரென சென்றனர். பிக்பாஸ் வீட்டிற்குள் போலீசார் சென்ற தகவல் காட்டுத் தீ போல் பரவியது. ஆனால் அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்க முடியாது என்று அங்கிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர். 

மேலும் வந்ததற்கான காரணத்தை கூறிய போது மீராவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். எதற்கு என்று கேட்ட போது அழகிப்போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை ஏமாற்றியதாக மீரா மீது புகார் இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.

இதனை அடுத்து மீராவை கன்பசன் ரூமுக்கு அழைத்த பிக்பாஸ் நிகழ்ந்தவற்றை கூறியுள்ளார். உடனடியாக அவர் வீட்டிற்கு வெளியே காத்திருந்த போலீசார் முன் நிறுத்தப்பட்டார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு போலீசார் புறப்பட்டுச் சென்றனர்.

அழகிப்போட்டி நடத்தி பெண்களை பிரபல மாடலாக்குவதாக கூறி பணம் பறித்தார் என்கிற குற்றச்சாட்டில் தான் மீராவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அடுத்தகட்டமாக இந்த வழக்கில் மீரா கைது செய்யப்படக்கூடும் என்றும் கூறுகிறார்கள்.