10 வருடங்களாக குழந்தை இல்லை! 2வது மனைவி வந்த பிறகு முதல் மனைவியை சம்பவம் செய்த கணவன்! அதிர்ச்சி காரணம்!

ராமநாதபுரத்தில் சொத்து தகராறு காரணமாக முதல் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து தப்பி ஓடிய கணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


ராமநாதபுரம் மாவட்டம் வண்டிக்காரன் தெருவை சேர்ந்தவர் சேதுபதி. இவருக்கு திருமணமாகி ராணி என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு இடையே நீண்ட காலமாக குழந்தை இல்லாததால் முதல் மனைவியின் சம்மதத்துடன் சேதுபதி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.  

இரண்டாவது திருமணம் செய்த பிறகு தொடர்ந்து இரண்டாவது மனைவி வீட்டிலேயே இருந்துகொண்டு முதல் மனைவியை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். அன்றாட தேவைக்கான பணம் கூட தரவில்லை.  

இதனால் சேதுபதியிடம் சொத்து பிரித்து தரும்படி கேட்டுள்ளார் முதல் மனைவி ராணி. இதற்க்காக இவர்கள் இருவருக்கும் இடையே தொடர்ந்து தகராறு நிலவி வந்துள்ளது.  

நேற்று ராணி மீண்டும் சொத்து பிரித்து தரக்கூறிய கேட்ட போது, ஆத்திரமடைந்த சேதுபதி காய்கறி வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து ராணியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.  

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சேதுபதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.