புதுச்சேரியை கலக்கும் குரூப் டிஸ்கவுண்ட் விபச்சாரம்! பொறி வைத்து பிடித்த போலீஸ்! 8 இளம் பெண்கள் மீட்பு!

புதுச்சேரியில் உள்ள ஓட்டல்களில் வெளிமாநில பெண்களை வைத்து விபசாரம் செய்த 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


புதுச்சேரி மாநிலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில்  தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் பலவற்றில் விபசாரம் நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸ் டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா உத்தரவின் பேரில், புதுச்சேரி போலீசார், நகரத்தில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் நேற்றிரவு (செப்டம்பர் 11) அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, புதுச்சேரி காமராஜர் சாலை பிருந்தாவனம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் மற்றும் அரும்பார்த்தபுரம் நேரு வீதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான வீடு, எல்லைப்பிள்ளை சாவடியில் உள்ள தனியார் ரெசிடன்சி மற்றும் புதுவை 100 அடி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டல் உள்ளிட்டவற்றில் விபசாரம் நடந்தது உறுதி செய்யப்பட்டது.  

இதையடுத்து, இப்பகுதிகளில் விபசாரத்தில் ஈடுபட்ட 8 பெண்களை போலீசார் மீட்டனர். மேலும் வாடிக்கையாளர்கள், புரோக்கர்கள் உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரால் மீட்கப்பட்ட பெண்கள் அனைவரும் மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

சுற்றலா வரும் பேச்சுலர்களை குறி வைத்து இவர்கள் விபச்சாரம் செய்து வந்துள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை பெண்களை ரேட் பேசி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். மேலும் குரூப்பாக வரும் இளைஞர்களுக்கு டிஸ்கவுண்ட் வேறு கொடுத்துள்ளனர்.