நடிகை ராதிகா - US பொறியாளர் ரகசிய திருமணம்! மகள் புகாரால் வெளியான திடுக் உண்மை!

டிவி நடிகையை அமெரிக்கப் பொறியாளர் ஏமாற்றினாரா என விசாரணையில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


குஜராத்தைச் சேர்ந்த ராதிகா நடிகர் பரத் நடித்த ஒரு படத்திலும், சீரியல்களிலும் நடித்துள்ளார்  அவரும் அவரது மகளும் விசாரணைக்காக திருவள்ளூர் நீதிமன்றத்துக்கு வந்தபோது ராதிகாவின் இரண்டாவது கணவரும் அமெரிக்காவில் குடியிருப்பவருமான ஜெயகரன் வாசுதேவன் தங்களுக்கு பலவகையில் தொல்லை கொடுப்பதாகத் தெரிவித்தனர். அப்போதைய புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நட்ராஜ், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் சிறுமி கூறினார்.

இதனிடையே  ராதிகாவின் முதல் கணவர் ஹேமந்த், தனது குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் தனது முதல் மனைவியுடன் விவாகரத்தாகி விட்ட நிலையில் தனது 2 குழந்தைகளுடன் வசித்து  வருவதாகவும் தனது 8 வயது மகனுக்கு பேசவராது என்பதால் தன்னை விட்டுப் பிரிவதில்லை என்றும், அமெரிக்க தொழிலதிபர் ஜெயகரன் வாசுதேவன் தெரிவித்தார்.

இந்நிலையில் தனது ஐ.டி. நிறுவன சென்னை கிளையில் வேலை கேட்டு வந்த ராதிகா தனது கணவர் தன்னைவிட்டுப் பிரிந்து சென்று விட்டதாலும் வறுமையில் வாடுவதாகக் கூறியதால் உதவிகளை செய்ததாகவும் கூறினார். இந்நிலையில் ராதிகா தன்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்வதாகக் கூறியதாகவும், தெரிவித்த ஜெயகரன், தனது மகனுக்கு ராதிகாவின் குழந்தைகள் சகோதர, சகோதரிகளாக இருப்பார்கள் என நம்பியதாகவும், அமெரிக்காவுக்கு அழைத்துச் செ ன்று திருமணம் செய்யும் முடிவில் இருந்ததாகவும், ஜெயகரன் கூறினார்.

அம்பத்தூரில் உள்ள தனது வீட்டில் ராதிகா குடும்பத்தினரை தங்க வைத்திருந்ததாகவும் கூறினார். பின்னர்தான்  ராதிகாவுக்கு முகநூலில் மூன்று அக்கவுன்ட்கள் இருக்கும் தகவல் தெரியவந்ததாகவும், அதைப் பார்த்த போது ராதிகா எப்படிப்பட்டவர் என்று புரிந்ததாகவும் இதனால் வீட்டை விட்டு வெளியேறும்படி ராதிகாவைக் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் சென்னை வந்த தன்னை ராதிகா தரப்பினர் மிரட்டி திருமணம் செய்து வைத்தனர் என்று அவர் தெரிவித்தார். 

இது தொடர்பாக தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தததாகவும், தனது தரப்பு நியாயத்தை புரிந்துகொண்டு செயல்பட்ட காவல் ஆய்வாளர் நடராஜுக்கு எதிராக நீதிமன்றத்தில் பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ராதிகா தரப்பினருக்கு பணம்தான் குறிக்கோள் என்றும், அவர்கள்  தன்னை மிரட்டிய ஆடியோ ஆதாரம் இருப்பதாகவும், சட்டரீதியாக சந்திக்க இருப்பதாகவும் ஜெயகரன் கூறினார். 

ஆனால் இருவருக்கும் வடபழனி கோவிலில் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்த ராதிகாவின் வழக்கறிஞர் நரேஷ்குமார்,  ராதிகாவுக்கு நடிப்பின் மூலம் கிடைத்த வருமானத்தில்தான் அம்பத்தூர் வீடு, கார் எல்லாம் வாங்கியதாகவும், அதனை ஜெயகரன் கேட்டதால் தான் பிரச்சினை ஏற்பட்டடதாகவும் தெரிவித்தார்.

ஜெயகரனுக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்பட்டு வருவதாகவும், கூறினார். ராதிகாவைத் தவறாக சித்திரித்த முதல் கணவர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும், ராதிகாவின் முதல் கணவர்  மூலம் அவருக்கு தொல்லை கொடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

திருவள்ளூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன், தனக்கு நடந்த கொடுமைகளைச் சொல்ல ராதிகாவின் மகள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். திருவள்ளூர் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையின்போது உண்மைகள் வெளிவரும் என்றும் அவர் கூறினார்.