பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்டுக்கும் லஞ்சம்! உயிரிழந்தவர் உறவினரிடம் கூட வசூல் வேட்டை! திருப்பூர் போலீசின் அடாவடி வைரல்!

திருப்பூரில் பிரேத பரிசோதனை அறிக்கையை விரைவில் முடித்து தர பொதுமக்களிடம் தலைமை காவலர் லஞ்சம் வாங்குவதை வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.


திருப்பூரில் திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் உள்ள தலைமை காவலர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறிக்கையை விரைவில் முடித்துத்தர அவர்களின் உறவினரிடம் லஞ்சமாக பணம் வாங்குவதை ஒரு நபர் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் லஞ்சம் மற்றும் ஊழல் செய்யும் அதிகாரிகள் குறித்து வாட்ஸ்அப் பேஸ்புக் போன்ற செயல்களின் மூலம் வெளிப்பட்டு வருகிறது. 

அதன்மூலம் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் போன்றவர்கள் லஞ்சம் வாங்குவதை அவர்களுக்கே தெரியாமல் வீடியோவாக பதிவு செய்து அவற்றை சமூக வலைதளங்களில் பரப்பி அவர்களுக்கு தண்டனையும் பெற்றுத்தந்துள்ளனர்.அதேபோல் திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் சுரேஷ் அவர் லஞ்சம் பெற்றதை அவர்களது உறவினர்களில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் தான் தலைமை காவலர் சுரேஷ் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்திலிருந்து திருமுருகன்பூண்டி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது .இதையடுத்து அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுமென காவல்துறையினர் தெரிவித்துள்ளார்