மார்பக மேம்பாடு சிகிச்சை! இளம் மாடல் அழகிக்கு டாக்டரால் ஏற்பட்ட விபரீதம்!

மும்பை: மாடலிங் பெண்ணை பலாத்காரம் செய்து மிரட்டி வந்த 55 வயது டாக்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.


செம்பூர் பகுதியை சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் மாடலிங் தொழில் செய்து வருகிறார். இவருக்கு, மார்பகத்தை பெரிதாக்க வேண்டும் என்கின்ற ஆசை வந்துள்ளது. இதற்காக, தனது நண்பர் மூலமாக, குறிப்பிட்ட 55 வயது டாக்டரிடம் அந்த பெண் சிகிச்சை பெற வந்திருக்கிறார். அதன்போது, இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டனர்.

இந்நிலையில், ஒருநாள், வெர்சோவா பகுதியில் வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்த அந்த டாக்டர், குறிப்பிட்ட பெண்ணை, அங்கு வரும்படி அழைத்துள்ளார். அப்போது, எதிர்பாராவிதமாக, மாடலிங் அழகியை அவர் பலாத்காரம் செய்துள்ளார். அதுபற்றிய புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொண்டு, அவ்வப்போது, அந்த பெண்ணை மிரட்டியும் வந்திருக்கிறார். இதன்பேரில், அப்பெண் போலீசில் புகார் தரவே, போலீசார் அவரை கைது செய்தனர். 

இங்குதான் கதையில் ட்விஸ்ட். ஆம். விசாரணையில், குறிப்பிட்ட பெண்ணின் வங்கிக் கணக்கில் டாக்டர் பணம் அனுப்பியுள்ள விவரம் கிடைத்துள்ளது. இதுதவிர, அந்த பெண் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறுவதால், என்ன செய்வது என்று தெரியாமல், தற்போது போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.