ஜன்னலை மூடுங்கள்! ஆடைகளை ஒவ்வொன்றான களையுங்கள்! பயிற்சி மாணவிகளுக்கு நடிகர் போட்ட பகீர் உத்தரவு!

நடிப்புப் பயிற்சிக்கு வந்த மாணவ - மாணவியரை ஆடைகளை முழுமையாக களைந்துவிட்டு நிர்வாணமாக நிற்கச் சொன்ன நடிப்பு பயிற்சியாளரை போலீசார் கைது செய்துள்ளன்னர்.


நாடகக் கலைஞரும், நடிப்புப் பயிற்சியாளருமான வினய் வர்மா என்பவர் நாராயாணகுடா என்ற இடத்தில் சூத்ரதார் என்ற பெயரில் நாடகக் குழுவை நடத்தி வருகிறார்  இவரிடம் 7 இளையர்கள் 2 இளம் பெண்கள் உட்பட  9 பேர் நடிப்புப் பயிற்சிக்காக வந்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு நடிப்பு பயிற்சி அளிக்க வந்த வினய் வர்மா அறையின் ஜன்ன்னல் கதவுகளை மூடிவிட்டு அனைவரும் ஆடைகளை முழுமையாக களைந்துவிட்டு நிர்வாணமாக நிற்க உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் திகைத்த அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்த நிலையில் ஆடையைக் களைபவர்கள் உள்ளே இருக்கலாம் எனவும் மற்றவர்கள் வெளியேறலாம் எனவும் கடுமையாகக் கூறியதையடுத்து ஆண்கள் அனைவரும் அவர் கூறியபடி நடந்துகொள்ள பெண்கள் இருவரும் வெளியேறியதாகக் கூறப்படுகிறது. 

இது குறித்து வினய் வர்மாவிடம் கேட்டபோது நிர்வாணமாக நிற்பதும் நடிப்புப் பயிற்சியின் ஒரு முக்கிய அம்சம் என்றார். தாங்கள் அவர்களை சிறப்பாக உருவாக்கும் நடைமுறைகளுக்கு அவர்கள் பக்குவப்பட்டு வருவார்களா என தெரிந்துகொள்ள இந்த முறை கடைபிடிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்

இந்நிலையில் இரண்டு பெண்களில் ஒருவர் அளித்த புகாரின் பேரில் வினய் வர்மா மீது போலீசார் பெண்களின் கண்ணியத்தைக் குலைத்தல், பாலியல் அத்துமீறல், குற்றச் சதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.