3 இளம்பெண்கள்! முழு போதை! ஒரே ஒரு கார்! அதிவேகம்! சென்னையில் போலீசிடம் சிக்கிய மன்மதன்!

குடிபோதையில் இளம்பெண்களுடன் கும்மாளமிட்டபடி அதிவேகத்தில் காரை ஓட்டிச் சென்ற மன்மதன் கைது செய்யப்பட்டுள்ளான்.


மாதவரம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரெட்டேரி சிக்னல் அருகே கார் ஒன்று மின்னல் வேகத்தில் சென்றது. போலீசார் கைகளை காட்டியும் கார் நிற்கவில்லை. உடனடியாக காரின் நம்பர் பிளேட்டை போலீசார் பார்த்துள்ளனர். அப்போது, அதில் பதிவு எண்ணுக்கு பதில் சிக்கண்ட் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது.

இதனால் அந்தக் காரை துரத்திச் சென்ற போலீசார் மஞ்சம்பாக்கத்தில் வைத்து மடக்கினர். காருக்குள் ஒரு இளைஞனும் மூன்று இளம் பெண்களும் இருந்தனர். நான்கு பேருமே முழு போதையில் இருந்தனர்.

இதனால் காரைப் பறிமுதல் செய்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைததுச் சென்றனர். விசாரணையில் காரை ஓட்டியவனின் பெயர் பிராட்போர்டு என்பதும அவன் மாதவரம் கே.ஆர். கார்டனைச் சேர்ந்த ஆங்கிலோ இந்திய இளைஞன் என்பதும் தெரியவந்தது.

அவனது கார் பதிவெண்ணில் இருந்த சிக்கண்ட் என்ற வார்த்தையானது, ஆஸ்திரேலியாவில்  பிளே பாய் என்பதை குறிக்கும் வார்த்தையாகும். அதன்படி, காரின் பதிவெண் பலகையில் அவன் ஷிக் கண்ட் என்று குறிப்பிட்டு சென்னையை வலம் வருவதாக தனது பெண் தோழிகளிடம் சவால் விடுத்து அவன் சிக்கியுள்ளான்.

தற்போது அவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.