ஒரே பைக்கில் 4 பேர்..! அடித்து தூக்கிய கார்..! கர்ப்பிணி மனைவி கண் முன் துடிதுடித்து உயிரிழந்த கணவன்! போடி பரபரப்பு!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மனைவி கண்ணெதிரே கணவர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.


ஜவுளி வியாபாரியான தருமத்துப்பட்டியை சேர்ந்த சதீஷ், மனைவி சுதா, குழந்தைகள் தாரணிகா, பிரணிகா ஆகியோருடன் வசித்து வந்தார். தற்போது அவரது மனைவி 3வது குழந்தையை கருவில் சுமந்து வருகிறார். 

2 தினம் முன்னர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் கடை வீதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இவர் சில்லமரத்துப்பட்டி அருகே சென்றபோது இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த கார் பயங்கரமாக மோதியதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் சதீஷ் கர்ப்பிணி மனைவி எதிரே துடிதுடித்து உயிரிழந்தார். மனைவி மற்றும் குழந்தைகள் க.விலக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் சுதாவின் கருகலைந்ததாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து போடி தாலுகா வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த பிரசாந்த் என்பவரை கைது செய்தனர். இரவு நேரங்களில் பல இடங்களில் பேரிகார்டுகள் வைக்கப்படுவதால் இது போன்ற விபத்துகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது.