லட்சியத்திற்கு இடையூறு! பெற்ற தந்தை மீது மகள் போலீசில் பகீர் புகார்!

சென்னை அருகே உள்ள ஐயப்பந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த பிளஸ் டூ முடித்த மாணவி மேற்படிப்பில் பத்திரிகை துறை அல்லது வழக்கறிஞர் துறையில் படிக்க விரும்புவதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.


அதற்கு மறுப்பு தெரிவித்த தந்தை B.Sc வேதியியல் படித்து ஆசிரியராக வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார். 

இதற்கு மறுப்பு தெரிவித்து விண்ணப்பிக்க முயற்சித்த மாணவியின் சான்றிதழ்களையும் தன்வசம் எடுத்து வைத்துக் கொண்டு தர மறுத்துள்ளார் தந்தை. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவி தனது பள்ளிப் புத்தகத்தின் பின்பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்த புகார் எண் (1098) பயன்படுத்தி புகார் அளித்துள்ளார். 

இதனால் உடனடியாக மாணவியை அணுகிய அருகிலுள்ள போலீசார் விசாரித்ததில், இவ்வாறு நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி மாணவியின் விருப்பப்படி படிக்க தந்தையின் அனுமதி பெற்று தந்துள்ளனர். மேலும் தந்தையிடமிருந்து சான்றிதழ்களையும் திரும்பப் பெற்று மாணவியிடம் ஒப்படைத்துள்ளனர் போலீசார்.