கனெக்டிகட்: அளவு மீறிய அழகூட்டும் சிகிச்சையால், பன்னி போல வாய் மாறிவிட்டதாக, பெண் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
அந்த உறுப்பு ரொம்ப பெருசா இருக்குனு ஆப்பரேசன் பண்ணுனேன்..! இப்போ இன்னும் பெருசாயிடுச்சி..! 42 வயது பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்!

கனெக்டிகட், ஸ்டாம்ஃபோர்ட் பகுதியை சேர்ந்தவர் 42 வயதான எலன் கோன்சாலெஸ். இவர், கடந்த 2004ம் ஆண்டு முதலாக, தனது உடலை மெருகூட்டும் பணியில் ஈடுபட தொடங்கினார். இதற்காக, உதடுகள், மூக்கு, உள்ளிட்ட பகுதிகளில் 5 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார்.
ஆனால், நாட்கள் செல்ல செல்ல, தனது முகம் பன்னி போல தோற்றமளிப்பதாகக் கூறி, எலன் வேதனை அடைந்தார். வேறு வழியின்றி பழைய முக அழகை பெற தீர்மானித்தார். இதன்படி, மீண்டும் பழைய தோற்றத்தை பெறுவதற்காக, புதிய அறுவை சிகிச்சையை செய்துகொண்டுள்ளார்.
இதனால், மூக்கு, வாய் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட அறுவை சிகிச்சை காயம் சரியாக ஆறாமல் உள்ளது. எனவே, சாப்பிட முடியாமல், திரவ ஆகாரமாக சாப்பிட்டு, நாட்களை கடத்தி வருவதாகவும், விரைவில் தனது பழைய முக அழகை பெறுவேன் எனவும் ,எலன் நம்பிக்கை தெரிவிக்கிறார்.