தெரு நாய்களிடம் சிக்கிய கர்ப்பிணி குரங்கு! கடித்துக் குதறிய பயங்கரம்! 4 மணி நேரம் போராடி மீட்ட ஆசிரியர்! நெகிழ வைக்கும் சம்பவம்!

புதுக்கோட்டையில் நாய்கள் கடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குரங்கு ஒன்றை மீட்டு உடற்கல்வி ஆசிரியர் காப்பாற்றிய சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.


சாலையில் விபத்தில் அடிபட்டு ஒருவர் துடிதுடித்துக் கொண்டிருந்தால் கூட நமக்கென்ன என்று போகும் சமூகத்தில் பல போராட்டங்களுக்கு இடையே குரங்கை காப்பாற்றி உள்ளார் உடற்கல்வி ஆசிரியர் முத்துராமலிங்கம்.  

புதுக்கோட்டை அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி எதிரே மரங்களில் எப்போதும் குரங்குகள் கூட்டமாய் அமர்ந்திருப்பது வழக்கம். கடந்த 10-ம் தேதி மாலை மரத்தின் கீழ் வந்து நின்றுகொண்டிருந்த கர்ப்பிணி குரங்கு ஒன்றை சில நாய்கள் சூழ்ந்து கொண்டனர். பின்னர் நாய்கள் குரைக்கத் தொடங்கியவுடன் தன்னை காப்பாற்றிக்கொள்ளவும், மீண்டும் மரத்தில் ஏறி தப்பித்துவிடவும் குரங்கும் போராடி உள்ளது.

ஆனால் 3 நாய்கள் சேர்ந்து அந்த குரங்கை கடித்துக் குதறி இருக்கின்றன. மரங்கள் மேல் இருந்த மற்ற குரங்குகளும் அந்த கர்ப்பிணி குரங்கை காப்பற்ற முடியாமல் நாய்களுக்கு பயந்து கீழே இறங்கி வராமல் வேதனையில் துடித்தன. நாய்கள் கடித்ததில் கர்ப்பிணி குரங்கின் அடிவயிறு முழுவதும் ரத்தம் சொட்டச் சொட்ட உயிருக்கு ஆபத்தான நிலையில், அந்தக் குரங்கு மரத்தில் ஏறி ஓடி ஒளிந்திருக்கிறது.

இதைப் பார்த்த பள்ளி மாணவர்கள் உடற்கல்வி ஆசிரியர் முத்துராமலிங்கத்திடம் தகவல் அளித்தனர். பின்னர் அங்கு வந்த குரங்கை பார்த்த முத்துராமலிங்கம் காப்பற்ற முயற்சி செய்தார். ஆனால் அந்த குரங்கை நலம் விசாரிக்கும் வகையில் 30 குரங்குகள் சூழ்ந்து கொண்டதால் கிட்ட செல்வதற்கு பயம்.

பின்னர் வாழைப்பழமும், தண்ணீரும் கொடுத்தார். அதை குரங்கு வாங்கி சாப்பிட்டது. பின்னர் அவர் வனத்துறைக்கு தகவல்அளிக்க அவர்கள் உபகரணங்கள், வலை, சாக்குப் பை எல்லாம் கொண்டு வந்தார்கள். பின்னர் குரங்கை பிடித்து கால்நடைத்துறை மருத்துவரிடம் அழைத்து சென்று ஊசி போட்டார்கள்.

பளுதூக்கும் போட்டிகளுக்கும் பயிற்சி அளிக்கும் முத்துராமலிங்கம் காவல்துறையில் சேர விரும்புபவர்களுக்கு இலவசப் பயிற்சி அளித்து வருகிறார். 2019-ம் ஆண்டின் காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனையான காவல்துறை உதவி ஆய்வாளர் அனுராதாவுக்கு பளுதூக்கும் பயிற்சி அளித்தவரும் இவர்தான் என்பது கூடுதல் தகவல் .