வயிறு வலியில் துடித்த 25 வயது வாய் பேச முடியாத பெண்! ஹாஸ்பிடலில் டாக்டர்கள் கூறிய காரணத்தை கேட்டு அதிர்ந்த பெற்றோர்!

திருவாரூர் மாவட்டத்தில் வயிற்று வலியால் துடித்த மாற்றுத்திறனாளி பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்ததால் அப்பெண்ணின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


திருவாரூர் மாவட்டம் அப்பரசன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் தம்பதிக்கு ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (25)என்ற வாய் பேச முடியாத காது கேட்காத ஒரு மாற்றுத்திறனாளி மகள் உள்ளார். ரேகா தனது பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது .

இந்நிலையில் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதற்கு யார் காரணம் என்பது குறித்து கௌதமியிடம் கேட்டுள்ளனர். 

இந்நிலையில் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது குறித்து கௌதமியால் சொல்ல முடியாத நிலையில் அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். இதையடுத்து அவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். பல நாட்கள் கேட்ட போதும் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது குறித்த ரேகா பெற்றோர்களிடம் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையடுத்து ரேகா பெற்றோர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.