கள்ளக்காதலியுடன் பேருந்தில் உல்லாசம்! கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி! பிறகு நேர்ந்த தரமான சம்பவம்!

பிலிப்பைன்ஸ் நாட்டின் நகர பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வந்த நபர் தனது மனைவிக்கு தெரியாமல் மற்றொரு பெண்ணுடன் உல்லாசமாக சுற்றி வந்த நிலையில் இதை நேரில் கண்ட மனைவி பொது இடத்திலேயே கணவருக்கு தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் வைரலாகி வருகிறது.


பிலிப்பைன்ஸ் நகரத்தின் பேருந்தில் கடந்த வெள்ளி கிழமையன்று  காலை பணியைந்துவங்க வந்த டிரைவர், பின்னால் அமர்ந்து இருந்த தனது காதலியுடன் சிலுமிஷம் செய்து கொண்டிருந்த் போது எதிர்பாரத விதமாக  அவரது மனைவி அங்கு வந்து விட்டார். இதனால் அவசரமாக பேருந்தை இயக்க முற்பட்ட டிரைவரின் காலரை பிடித்த மனைவி, சரமாரியாக தாக்க துவங்கினார்.

ஏற்கனவே திருமணமாகி 12 குழந்தைகள் கொடுத்து என்னுடன் வாழ்ந்து வந்த நிலையில் மற்றொரு பெண்ணுக்காக எங்களை தூக்கி எறிய முடிவு செய்து விட்டாயா என கேட்ட மனைவி கணவருக்கு கொடுத்த தர்ம அடி பேருந்தில் இருந்த அனைவரும் மிரள வைத்தது. இதற்கிடையில் அவரது காதலி யாருக்கும் தெரிதாமல சத்தமில்லாமல் தப்பி ஓடுவது இந்த காட்சிகளில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தால் வேலைக்கு செல்ல வேண்டிய பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர், இதனையடுத்து மற்றொரு டிரைவர் மாற்றம் செய்யப்பட்டு அந்த பேருந்து விரைந்து இயக்கபட்டது மேலும் இந்த தகராறை சமாளிக்க இருவரையும் தனியாக அழைத்து சென்று போலீசார் சமாதானம் செய்ய முயற்சி செய்தனர்.

பேருந்தில் பட்ட பகலில் டிரைவர்   மனைவியால் புறட்டி புறட்டி அடிக்கபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.