ஒடிசாவை சின்னாபின்னமாக்கியது ஃபானி! மணிக்கு 245கிமீ வேகத்தில் சூறாவளி காற்று!

பானி புயல் கரையை கடந்த போது மணிக்கு 245 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.


காலை 8 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கிய புயல் காலை 11 மணி அளவில் கரையை கடந்தது. ஃபானி புயலின் கண் பகுதி கரையை கடந்த போது மணிக்கு 245 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.

மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் தான் காற்று வீசும் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மணிக்கு 245 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் விழுந்தன.

புயல் கரையை கடக்கத் தொடங்கிய போது மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. ஆனால் புயல் கரையை கடந்த போது அதிகபட்சமாக 245 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசியது.

சூறாவளி காற்றுடன் மழையும் பெய்த காரணத்தினால் ஒடிசாவில் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்படுள்ளது- பூரி நகரில் திரும்பிய பக்கம் எல்லாம் மரங்கள் சாய்ந்து சின்னாபின்னமாக கிடக்கிறது.