இந்திய வரலாற்றில் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது பெட்ரோல் விலை.
மேலே மேலே போகுது பெட்ரோல் விலை. ரூபாய் மதிப்பும் இறங்கியது. எங்கே போகிறது இந்திய பொருளாதாரம்?
ஈராக் அமெரிக்க போர் பதட்டம் காரணமாக மத்திய கிழக்கு தேசங்களில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. மேலும் இந்திய ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 72 டாலருக்கு மேல் சரிந்தது போன்ற காரணங்களால் இந்தியாவில் பெட்ரோல் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது இந்திய பெட்ரோலிய இறக்குமதி துறை. இதனால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது.
கடந்த 2018 அக்டோபரில் பெட்ரோல் விலை ரூ.87ஆக உயர்ந்து அதன் உச்சத்தை தொட்டது. அதன் பிறகு படிப்படியாக குறைந்து 72 ரூபாய் என்ற அளவு வரை குறைந்தது.
அதன்பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியால் நடந்த வான்வழி தாக்குதல் காரணமாக. இந்தியாவில் அடுத்து 2 வாரங்களில் பெட்ரோல் விலை ரூ.2.50 உயர்ந்தது. அதன்பிறகு விலை குறைந்தாலும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு காரணமாக மீண்டும் பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா. பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் என பல்வேறு பிரச்னைகளுக்காக மக்கள் போராடிக் கொண்டு இருக்கும் இந்த வேளையில், பெட்ரோல் விலை ஏற்றம் பெரிய அளவில் பேசப்படாமல் இருக்கிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 30 முறைக்கும் மேல் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 78 ரூபாய்க்கும். முறையே பாண்டிச்சேரி 74 பெங்களூரு 78 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த சில நாட்களில் 100 ரூபாயைத் தொட்டாலும் ஆச்சரியம் இல்லை என்கின்றனர் இந்திய பெட்ரோலிய இறக்குமதி நிறுவனங்கள்...
மணியன் கலியமூர்த்தி