ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்! பதற வைக்கும் சிசிடிவி காட்சி!

ஒடிஷா மாநிலத்தில், இரயிலில் ஏற முய்ற்சித்த பயணி கால் தவறி நடைபாதைக்கும் இரயிலுக்கும் இடையே சிக்கிய பரபரப்பு காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ஒடிஷா, ஜர்துகா ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ராஜேஷ் தல்வார் என்ற பயணி ஏற முயற்சி செய்திருக்கிறார். எதிர்பாரதவிதமாக கால் சறுக்கி ரயிலுக்கும், நடைமேடைக்கு இடையில் சின்ன இடைவெளி அளவில் சிக்கிக் கொண்டார். இதனை கண்டு சகப் பயணிகள் செய்வது அறியாமல்  அதிர்ந்துபோனர்கள்.சுதாரித்துக்கொண்ட பின்னர் அங்கிருந்த நபர்கள் சிலர், ராஜேஷை  காப்பாற்ற முயற்சி செய்தும், இரயில் வேகமாக இழுத்து சென்றதால் ராஜேஷ் கீழே விழுந்தார். இரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு தண்டவாளத்திற்கும், நடைமேடைக்கும் இடையில் சிறு இடைவெளியில் சிக்கிய ராஜேஷ் மீட்க முடியாமல் தவித்தனர்.

பின்னர் நிதானித்து நிறுத்தப்பட்ட இரயில் மீண்டுமாக இயங்க துவங்கியதை அடுத்து தண்டவாளத்தின் ஓரத்தில் சிக்கி இருந்த ராஜேஷை பத்திரமாக மீட்டு எடுத்தனர். ராஜேஷ் மாட்டிக்கிண்ட  காட்சிகள் அனைத்தும் ரயில்வே நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது, மேலும் இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவு காண்போரை பயத்தில் ஆழ்த்துகிறது.